தமிழகத்தில் பரவலாக மழை பொழிந்து வரும் நிலையில் 21 மாவட்டங்களில் கன மழை நீடிக்கும்எனசென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.சென்னை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் மழை நீடிக்க வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி, கோவை, நீலகிரி, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் கனமழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவை ஆழியாறு கவியருவியில்குளிக்கத்தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள ஆழியாறு கவியருவியில்சுற்றுலாப்பயணிகள்குளிக்கத்தடை விதிக்கப்பட்டுள்ளது.மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து இந்த உத்தரவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.