/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/coutrallam_0.jpg)
குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பொழிந்து வருகிறது. இதன் எதிரொலியாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அனைத்து குற்றால அருவிகளிலும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வார விடுமுறை நாளையொட்டி ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குற்றாலம் அருவிகளில் குளிக்க வந்திருந்தனர். ஆனால், அரசின் இந்த தடை உத்தரவை அறிந்துசுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
Follow Us