Advertisment

குற்றாலம் மெயின் அருவியில் குளிக்கத் தடை! 

Bathing in Courtalam main waterfall prohibited

குற்றாலம் மெயின் அருவியில் குளிக்கத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாகத்தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்கத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப்பித்துள்ளது.

Advertisment

அதே சமயம் தொடர் விடுமுறை மற்றும் பள்ளி மாணவர்களுக்குக் காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குற்றாலம் மெயின் அருவிகளில் குளிக்கவந்திருந்தனர். இந்த சூழலில் இந்த தடை உத்தரவின் மூலம் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Advertisment

Courtallam waterfalls Tenkasi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe