Advertisment

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் 

Demonstration of the Barber Workers Union before the District Collector's Office

Advertisment

முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், ‘தற்போது கார்ப்பரேட் நிறுவனங்கள் முடிதிருத்தும் தொழிலைக்கையில் எடுத்துக் கொண்டு உள்ளதால் சிறிய அளவிலான கடைகள் வைத்திருக்கக்கூடிய முடி திருத்துபவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே அவர்களுக்கான உரிமை அரசு வழங்கக் கூடாது.

வங்கிக் கடன் வழங்கி இந்த தொழிலை மேம்படுத்த வேண்டும். வீடு-மனை இல்லாத தொழிலாளர்களுக்கு நகர எல்லைக்குள் மனையோ அல்லது அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடோ வழங்க அரசு முன்வர வேண்டும்.கோவில்களில் மொட்டை அடிக்கும் தொழில் செய்து வந்த முடிதிருத்தும் தொழிலாளர்கள் தற்போது மொட்டை அடிப்பதற்குக் கட்டணம் இல்லாததால் கோவில் நிர்வாகம் மூலம் மாத சம்பளம் தர அரசு முன்வர வேண்டும்.

Advertisment

கோவில் நிர்வாகங்களில் பணிபுரியக்கூடிய முடிதிருத்தும் தொழிலாளர்கள் அரசு ஊழியர்களாக அறிவிக்கப்பட வேண்டும்’ உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe