Barber  lost their life due to poverty

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மடவாளம் பகுதியைச் சேர்ந்த வடிவேல் மகன் அன்பு (55) இவர் வீட்டின் அருகே முடிதிருத்தும் கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் சில மாதங்களாக இவருடைய கடைக்கு எவரும் முடிதிருத்தம் செய்ய வரவில்லை என தெரிகிறது.

Advertisment

இதன் காரணமாக சில நாட்களாக மிகுந்த மன உளைச்சலிலும்,மிகவும் வறுமையிலும் அன்பு இருந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பாத காரணத்தால் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை‌‌.

Advertisment

Barber  lost their life due to poverty

இ‌ந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவருடைய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவ்வழியே சென்ற பொதுமக்கள் கிணற்றில் ஆண் சடலம் ஒன்று இருப்பதாக திருப்பத்தூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சிறிது நேரம் போராடி உடலை மீட்டு திருப்பத்தூர் கிராமிய போலீசாரிடம் ஒப்படைத்தனர். திருப்பத்தூர் கிராமிய போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வறுமையின் காரணமாக முடிதிருத்தும் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டசம்பவம், அப்பகுதியில் பகுதியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் மற்றும் ஒரு ஆண் பிள்ளை உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment