பொள்ளாச்சி காம கொடூர சம்பவத்தில் மிக முக்கிய குற்றவாளியான பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் பிரவீனுக்கு மிக நெருக்கமானவர் பார் நாகராஜ். இவர்மீதுபொள்ளாச்சியில் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு காவல்துறையில் புகார் கொடுத்த இளம் பெண்ணின் அண்ணனை தாக்கியதாக ஒரு வழக்கு உள்ளது.

Advertisment

bar nagaraj

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

இந்த வழக்கை முதலில் விசாரித்த லோக்கல் போலீசார் பார் நாகராஜைகைது செய்து பின்னர்ஜாமினில் விட்டுவிட்டனர். இன்று காலை 10.30 மணிக்கு டாடா சுமோ காரில் மஃப்டியில்வந்திறங்கிய சிபிஐ போலீசார் பார் நாகராஜை தூக்கிக்கொண்டு விசாரணைக்கு அழைத்து சென்றதாக பொள்ளாச்சியில் இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisment

முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓபிஎஸ், மாவட்ட மந்திரி எஸ்பி.வேலுமணி, துணைசபாநாயர் பொள்ளாச்சி ஜெயராமன், அவரது மகன் பிரவீன் ஆகியோருக்கு மிக நெருக்கமானவர் பார் நாகராஜ். இவரிடம் இருந்து பொள்ளாச்சி சம்பவம் தொடர்பான உண்மைகளை சிபிஐ கறந்தால் இந்த வழக்கில் பெரிய திருப்பம் ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

செய்தி: தாமோதரன் பிரகாஷ்,

சிவா