Advertisment

கரோனா தொற்றிலிருந்து மீண்ட ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்...

banwari lal purohit tests negative for corona

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisment

சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகையின் பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உள்பட 84 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது அண்மையில் உறுதிசெய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஆளுநர் பன்வாரிலாலுக்கு வழக்கமான மருத்துவப் பரிசோதனை செய்ததில் நலமுடன் உள்ளதாகவும் ஏழு நாள் தனிமைப்படுத்தப்படவும் மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஆனால், இரண்டாவது சோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

Advertisment

இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். இந்நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் தொற்று குணமாகியுள்ளது தெரியவந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

banwarilal purohit corona virus
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe