me

சென்னை விமான நிலையம் முதல் சாந்தோம் வரை பாஜக தலைவர் அமித்ஷாவை வரவேற்று வைக்கப்பட்டுள்ள பேனர்கள் குறித்து அரசு தலைமை வழக்கறிஞரிடம் தலைமை நீதிபதி விளக்கம் கேட்டார்.

Advertisment

பாதசாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக பல இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் ஏற்கனவே வகுத்துள்ள விதிகளை பின்பற்றி வைக்கலாமே, விதிமீறல் பேனர்களை அரசு கண்காணிக்க வேண்டும் என்றும் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணிடம் தலைமை நீதிபதி விளக்கம் கேட்டார்.

Advertisment

அரசின் கவனத்திற்கு கொண்டு சொல்வதாகும், உரிய அறிவுறுத்தல் வழங்குவதாகவும் அரசு தலைமை வழக்கறிஞர் விளக்கம் அளித்தார்.

தனக்கு பேனர் வைக்க வேண்டும் என்று எந்த தலைவர்களும் விரும்புவதில்லை என்றும், ஆனால் அவர்களை கவர்வதற்காகவும், விளம்பரத்திற்காகவுமே அவர்களை பின்பற்றுபவர்கள் பேனர் வைக்கின்றனர் என அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

Advertisment