பேனர்கள் மாயம்; சாலைமறியலில் ஈடுபட்ட விசிகவினர்

Banners are removed; The vck involved in the roadblock

புதுக்கோட்டையில் விசிக தலைவர் திருமாவளவனின் பிறந்தநாளை முன்னிட்டு அக்கட்சியினர் வைத்த பேனர்கள் காணாமல் போனதாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு பரபரப்பை ஏற்படுத்தியது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த மாட்டாங்கால் பகுதியில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு அக்கட்சியினர் பேனர் வைத்திருந்தனர். இந்நிலையில், திடீரென நேற்று வைக்கப்பட்டிருந்த பேனர்கள் காணாமல் போனதாக இருதரப்பு இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதனால் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்பொழுது ஒவ்வொரு ஆண்டும் இதே போல் ஒரு சமூகத்தினர் பிளக்ஸ் பேனர்களை வைத்தால், மற்றொரு தரப்பினர் அவற்றை அகற்றுவதையே வேலையாக செய்து வருகின்றனர் எனக் குற்றச்சாட்டு தெரிவித்தனர். காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

banners police Pudukottai struggle vck
இதையும் படியுங்கள்
Subscribe