Skip to main content

தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு புழக்கம்!

Published on 10/07/2018 | Edited on 10/07/2018
lottery


இந்தியாவில் கேரளா, அசாம், பீகார், டெல்லி, கோவா உள்பட 17 மாநிலங்களிலில் லாட்டரி சீட்டுகளை தனியாரும் அரசும் நடத்தி வருகிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும் பல வருடங்களாகவே லாட்டரி சீட்டுக்கு தடை விதித்தின் பேரில் அரசும் தனியாரும் லாட்டரி சீட்டை விற்பது இல்லை. இருந்தாலும் தேனி மாவட்டத்தையொட்டி கேரள இருப்பதால் கேரளாவில் விற்கப்படும் ஸ்ரீசக்தி, வின்வினு, காருன்யா, நிர்மல், பவுர்ணமி உள்பட பல வகையான லாட்டரிகள் போடி மெட்டு, கம்பம்மெட்டு, குமுளி வழியாக தேனி மாவட்டத்திற்கு லாட்டரி வியாபாரிகள் வாங்கி வந்து விற்பனை செய்து வருகிறார்கள் .

இப்படி கேரளாவில் வாங்கி வரும் லாட்டரி சீட்டுகளை கூடலூர், கம்பம், பிளையம், சின்னமனூர், போடி, தேனி, ஆண்டிபட்டி, பெரியகுளம் போன்ற பகுதிகளில் லாட்டரி வியாபாரிகள் பகிரங்கமாகவே விற்பனை செய்து வருகிறார்கள். அதிலும் மஞ்ச பையை கையில் தொங்க விட்டு கொண்டு செல்லும் லாட்டரி வியாபாரிகளோ, அப்பகுதிகளில் கூலி வேலை பார்க்கும் தொழிலாளர்களை கூறி வைத்து, அவர்களிடம் பல லட்சம் பணம் கிடைக்கும் என ஆசை வார்த்தை காட்டி ஒரு லாட்டரி சீட்டு முப்பது ரூபாய் என்றும் ஐந்து லாட்டரி சீட்டுகளை ஒன்றாக சேர்ந்து வாங்க சொல்லியும் வற்புறுத்தி வருகின்றனர். இவர்களின் ஆசை வார்த்தைக்கு மயங்கும் கூலித் தொழிலாளர்களும் கஷ்டப்பட்டு வேலை பார்த்து தங்களுக்கு கிடைக்கும் தினக்கூலி பணத்தில் பாதிக்கு லாட்டரி சீட்டுகளை வாங்கி செல்கிறார்கள்.
 

 

 

இதனால் பல தொழிலாளர்கள் தங்கள் கூலி பணத்தை முழுதாக வீட்டுக்கு கொண்டு போக முடியாத சூழ்நிலைக்கும தள்ளப்பட்டு வருகிறார்கள். இப்படி தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுகிற விஷயம் காக்கிகளுக்கு தெரிந்தும் கூட அந்த லாட்டரி சீட்டு வியாபாரிகள் போடும் எலும்பு துண்டுக்கு வால் ஆட்டி கொண்டு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

இந்தநிலை தொடந்து நீடித்தால், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு மூலம் பல குடும்பங்கள் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்படும். தேனி மாவட்டத்தை பொருத்தவரை மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ்வோ மக்களின் நலனுக்காக பல அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அப்படிப்பட்ட கலெக்டர் இந்த தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களும் வலியுறுத்தி வருகிறார்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கேரளா லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் மீது வழக்குப் பதிவு

Published on 04/07/2023 | Edited on 04/07/2023

 

 A case has been registered against a teenager who was involved in selling Kerala lottery tickets

 

ஈரோடு மாவட்டத்தில் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவிட்டார். அதன் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு பவானியில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 11 பேர் கொண்ட கும்பல் பிடிபட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு கருங்கல்பாளையத்தில் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுகிறதா என்று போலீசார் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர்.

 

இந்நிலையில் நேற்று ஈரோடு மாணிக்கம் ஹவுசிங் யூனிட் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தியபோது சாய்ராம் (35) என்பவர் கேரளா லாட்டரி சீட்டுகளை வெள்ளைத் தாளில் எழுதி பரிசு விழும் என்று ஆசை வார்த்தைக் கூறி லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் சாய்ராம் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

Next Story

லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட பெண் உள்பட 4 பேர் கைது

Published on 01/07/2023 | Edited on 01/07/2023

 

4 people, including a woman, were arrested for selling lottery tickets

 

ஈரோடு மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இதைப்போல் கருங்கல்பாளையம் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கருங்கல்பாளையம் கே.எஸ்.நகர் ஸ்ரீ ரங்கபவனம் திருமண மண்டபம் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது ஒரு கும்பல் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

 

அந்த கும்பலை போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சேலம் மாவட்டம் ஆத்தூர் முல்லைவாடி இளங்கோ தெருவை சேர்ந்த ரவி (50), ஈரோடு விநாயகர் கோவில் தெரு மூலப்பாளையம் பகுதி சேர்ந்த ஆனந்த் (50), ஈரோடு மாவட்டம் பவானி கேசரிமங்கலம் பகுதியைச் சேர்ந்த நிர்மலா (36), சேலம் மாவட்டம் ஆத்தூர் காந்திநகரைச் சேர்ந்த தரனீஷ் (21) ஆகியோர் எனத் தெரிய வந்தது.

 

இவர்கள் வெளிமாநில லாட்டரி சீட்டு எண்களை வெள்ளை தாளில் எழுதியும் ஆன்லைன் மூலமாக பரிசு விழும் எனக் கூறி பொதுமக்களை ஏமாற்றி வந்துள்ளனர். இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நான்கு பேரையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 6 விலை உயர்ந்த செல்போன்கள், 40 கேரளா லாட்டரி சீட்டுகள், ஒரு லேப்டாப், 2 கார்கள் மற்றும் ரூ. 1.30 லட்சம் ரொக்க பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.