உயிருக்கு உலை வைக்கும் ஆப்ரிக்கன் கெளுத்தி... 5 டன் பறிமுதல்!

 Banned African catfish sales... 5 tons of fish destruction!

மத்திய, மாநில அரசுகளால் தடைசெய்யப்பட்ட மீன் வகை ஆப்ரிக்கன் கெளுத்தி மீன். சாப்பிட்டால் உயிருக்கே உலைவைக்கும்கேன்சர் உள்ளிட்ட பல நோய்களுக்கு உள்ளாக்கப்படலாம் என்று மருத்துவ உலகம் எச்சரிக்கும் நிலையில் இந்தியாவில் பல இடங்களில் சட்டவிரோதமாக ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் விற்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 31 இடங்களில் குட்டை அமைத்து ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களை விற்றுவந்தது தெரியவர, தருமபுரி மீன்வளத்துறை அதிகாரிகள் குட்டைகளை களைத்து அதிலிருந்து மீன்களை அப்புறப்படுத்தினர். மதிக்கோன் பாளையத்தில் ஆய்வு செய்த அதிகாரிகள் அங்குள்ள மூன்று குட்டைகளில் கோழிக்கழிவு மூலம் ஏற்படும் துர்நாற்றம் வைத்து அங்கு ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் வளர்க்கப்படுவதை கண்டுபிடித்தனர். இந்த வகை மீன்களுக்கு கோழி கழிவுகளே உணவாக தரப்படுகிறது. குறிப்பிடப்பட்ட மூன்று குட்டைகளிலிருந்து நீரை வெளியேற்றிய அதிகாரிகள் குட்டையிலிருந்த சுமார் 5 டன் ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களை கைப்பற்றி மண்ணில் மூடி அழித்தனர்.

dharmapuri fish
இதையும் படியுங்கள்
Subscribe