Advertisment

வங்கிகளில் பணம் எடுக்க திரண்ட பொதுமக்கள்

 public

Advertisment

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்தத்திற்க்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் குடியுரிமை சட்டத்திருத்தை திரும்ப பெறவேண்டும் எனவும், தமிழக அரசு சட்டசபையில் 'குடியுரிமை சட்டத்திருத்தத்தை தமிழகத்தில் அமல்படுத்தமாட்டோம்' என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என இராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர்போராட்டமாக கீழக்கரையில் 14வது நாளாகவும்,தொண்டியில் 21வது நாளாகவும், தேவிப்பட்டினத்தில் 15வது நாளாகவும் பல்வேறு நூதன போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து இன்று கீழக்கரையில் உள்ள வங்கிகளில் இஸ்லாமிய பெருமக்கள் பெருமளவில் திரண்டு வங்கிகளில் தங்களுடைய கணக்கில் உள்ள பணத்தை எடுக்க ஒரே நேரத்தில் அதிகளவில் திரண்டதால் வங்கி ஊழியர்கள் திகைத்தனர். இதையடுத்து அவர்கள் சேமிப்பு மற்றும் வைப்பு தொகையை எடுத்து சென்றனர். இதனால் பரபரப்பு மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

money Banks public
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe