"வங்கிக்கடன் தவணையிலிருந்து விலக்களிக்க வேண்டும்"- டிடிவி.தினகரன் வலியுறுத்தல்!

banks emi coronavirus lockdown ammk chief ttv dhinakaran tweets

ஊரடங்கு காலத்தில் வங்கிக்கடன் மாதத் தவணையில் இருந்து விலக்களிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சரை டிடிவி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

அ.ம.மு.க.வின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இத்தனை நாட்கள் ஆன பிறகும் வங்கிக்கடன்களுக்கான மாத தவணையைச் (EMI) செலுத்துவதற்கான விதிவிலக்குகள் குறித்து ரிசர்வ் வங்கி இதுவரை அறிவிக்காதது கண்டனத்திற்குரியது. ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலன் கருதி இதனைச் செய்திட வேண்டிய மத்திய அரசும் வேடிக்கை பார்ப்பது நியாயமல்ல. இப்பிரச்னையில் பிரதமரும், மத்திய நிதி அமைச்சரும் உடனடியாக தலையிட வேண்டும். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் 'கடிதம் எழுதியதோடு கடமை முடிந்தது' என்று இல்லாமல் உரிய அழுத்தம் கொடுத்து ஊரடங்கு காலத்தில் வங்கிக்கடன் மாதத் தவணைகளிலிருந்து விலக்கு பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்." இவ்வாறு ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ammk chief minister Tweets
இதையும் படியுங்கள்
Subscribe