boi

Advertisment

திருவள்ளூரில் உள்ள பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் உள்ள ரூ.6 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி செயல்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்கள் வார இறுதி விடுமுறைக்குப் பின் இன்று வழக்கம் போல் வங்கியை திறக்க வங்கி மேலாளர் மோகன் வங்கிக்கு வந்துள்ளார். அப்போது கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் சம்பவம் குறித்து உடனடியாக அவர் காவல்துறைக்கு தகவல் அளித்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவலர்கள் வங்கியின் உள்ளை சென்று பார்த்தபோது, பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த ரூ.6 கோடி மதிப்பிலான நகைகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளளது. இதையடுத்து சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்துள்ள காவல்துறையினர் வங்கியில் உள்ள சிசிடிவி காட்சிகள் அடிப்படையிலும், வங்கி ஊழியர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.