Advertisment

மத்திய அரசின் உத்தரவை மதிக்காத வங்கிகள்; விவசாயிகள் கொந்தளிப்பு

bank managers disobey union government rules  for farmers loan related issue

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்புவிவசாய சங்கம் சார்பில் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சார்பில்திருச்சிகண்டோன்மெண்ட்பகுதியில் உள்ள இந்தியன்ஓவர்சீஸ்வங்கியின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

இந்த போராட்டம் குறித்துசெய்தியாளர்களைச்சந்தித்துப்பேசிய தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயச்சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு கூறுகையில், "மத்திய அரசின் திட்டங்களானபென்ஷன், மாதம் 500 ரூபாய் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, கைம்பெண்உதவித்தொகை, வயது முதிர்ந்தோர்உதவித்தொகை மூலம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் பணத்தை அவர்கள் வாங்கியகடனுக்காகப்பிடிக்கக் கூடாது என்று மத்திய அரசு கூறிய பிறகும்..10 லட்சம் கோடி கடன் வாங்கிய கம்பெனிகளின் கடன்களைத்தள்ளுபடி செய்து விட்டு10,000 ரூபாய் கடன் வாங்கிய விவசாயிகளின் கடன்களுக்காகஅந்ததொகைகளைப்பிடிக்கும் வங்கி மேலாளர்களைக் கைது செய்யக்கோரி வங்கிக்குப் பூட்டுப் போடும் போராட்டத்தை நடத்த உள்ளோம்" என்றார்.

Advertisment

இதனைத்தொடர்ந்து வங்கிக்கு பூட்டு போட முயன்றவர்களைதடுத்து நிறுத்திய காவல்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உங்கள் பிரச்சனை தொடர்பாக மனு ஒன்று எழுதி வங்கி மேலாளரிடம் கொடுங்கள் என்று வலியுறுத்தினர். இருப்பினும் விவசாயிகள் தங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றும் வரை வங்கியில் காத்திருந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று வங்கியின் முன்பு அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வங்கியின் மண்டலஅதிகாரிவிவசாயிகளுக்குஇது குறித்து உரிய பதில் கூறுவதற்கு முன்வராததால் விவசாயிகள் மீண்டும் வங்கியின் வளாகத்திற்குள் நுழைந்துவங்கிக்கு பூட்டுபோடும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் விவசாயிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து விவசாயிகளை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்தனர்.

Ayyakannu bank Farmers police trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe