Advertisment

வங்கியில் தீவிபத்து; எரிந்து நாசமான சாதனங்கள் 

Bank fire; Burned out appliances

செங்கல்பட்டு மாவட்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் வங்கியில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமாகின.

Advertisment

செங்கல்பட்டு மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்குள் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியானது. உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் வங்கி முழுவதும் தீ பரவி அங்கிருந்த ஏ.சி, கம்ப்யூட்டர்கள் மற்றும் மின் சாதனங்கள் எரிந்து சேதமடைந்தது. வங்கி திறக்கப்படுவதற்கு முன்பதாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டதால் பல பொருட்கள் சேதம் அடைந்தது. ஒரு மணி நேரத்திற்கு மேலான போராட்டத்திற்கு பிறகு தீயானது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisment
Chengalpattu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe