Skip to main content

"தனியாரிடம் ஒப்படைக்க கூடாது" - போராட்டத்தில் வங்கி ஊழியர்கள்!

Published on 28/02/2020 | Edited on 28/02/2020

மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க தீவிர முயற்சியில் உள்ளது. பொதுத் துறைக்கு சொந்தமான பங்குகளை தனியார் வசம் கொடுத்து வருகிறது. இந்நிலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் தனியார் மயமாக்க மத்திய அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதாக கூறி நாடு முழுக்க வங்கி ஊழியர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

 

Bank employees demand

 

 

இதனை தொடர்ந்து ஈரோட்டில் இன்று வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் கூட்டமைப்பு சார்பாக ஸ்டேட் வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கூட்டமைப்பு தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட வங்கி ஊழியர்கள் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் தனியாரிடம் ஒப்படைக்க கூடாது, வங்கி ஊழியர்கள் அதிகாரிகளுக்கு சம்பள உயர்வு கொடுக்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனம்! (படங்கள்)

Published on 20/12/2021 | Edited on 20/12/2021

 

 

சென்னையில் உள்ள தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி மற்றும் தமிழக மாவட்டங்களில் செயல்படும் 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றை இணைத்து தமிழ்நாடு வங்கியை உருவாக்க வேண்டும் என்று பல வருடங்களாக கோரிக்கை வைத்து தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனம் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர்.

 

இக்கோரிக்கை சம்பந்தமாக பல கடிதங்கள் அரசு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருக்கு அனுப்பப்பட்டது. சமீபத்தில் பாரத ரிசர்வ் வங்கியும் இத்தகைய வங்கிகளை ஒருங்கிணைத்தலுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.

 

தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 1200 கிளைகளோடு செயல்பட்டு வரும் மாநில மத்திய கூட்டுறவு வங்கிகள் பல்வேறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் அடித்தட்டு மக்களுக்கும் விவசாய பெருமக்களுக்கும் மகத்தான சேவை செய்து வரக்கூடிய  இவ்வங்கிகளை இணைத்து தமிழ்நாடு வங்கி உருவாக்க கோரி கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனம் தமிழ்நாடு சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தர்ணா போராட்டம் நடத்தினர்.

 

 

 

Next Story

போராட்டத்தில் ஈடுபட்ட வங்கி ஊழியர்கள்! (படங்கள்)

Published on 16/12/2021 | Edited on 16/12/2021

 

 

மத்திய அரசு லாபத்தில் இயங்கி வரும் பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு தாரை வார்க்க முடிவு செய்து நடப்பு குளிர்கால கூட்டத் தொடரிலேயே இதற்கான மசோதா நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வங்கி ஊழியர் சங்கத்தினர் நாடு முழுவதும் 2 நாள் பொது வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். அந்த வகையில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் தமிழ்நாடு வங்கி சங்கங்களின் ஐக்கிய மன்றம் சார்பில் கோஷம் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வேலை நிறுத்த பேரணியின் போது பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும்  மசோதாவை கைவிடக்கோரி கோஷங்களும் எழுப்பினர்.