Advertisment

குறுஞ்செய்தியால் லட்சத்தை இழந்த வங்கி ஊழியர்! 

A bank employee who lost lakhs by text message!

Advertisment

திருச்சி மாவட்டம், நம்பர் ஒன் டோல்கேட் மகாலட்சுமி நகர், சரவணா அடுக்குமாடி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் (32). இவர், அறந்தாங்கி பகுதியில் ஒரு தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், அவரது செல்போன் எண்ணுக்கு வேறொரு தனியார் வங்கியிலிருந்து கிரெடிட் கார்டு தொடர்பாக ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், ஒரு குறிப்பிட்ட ஒரு செயலியை பதிவிறக்கம் செய்யவும், அதில் கேட்கும் கேள்விகளுக்கு தகவல்களை தர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சதீஷ், செயலியை பதிவிறக்கம் செய்து அதில் கேட்ட வங்கி தொடர்பான அனைத்து தகவல்களையும் பதிவிட்டுள்ளார்.

இதை எடுத்து அவருக்கு ஒரு குறுஞ்செய்தி மூலம் வந்த ரகசிய எண்ணைபதிவு செய்த சில நிமிடங்களில் தனது வங்கியிலிருந்த ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 700 ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது. பணம் பறிபோனதும் உடனடியாக சதீஷ், திருச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe