bank employee who got electrocuted passed away

சிதம்பரம் அருகே பெருங்காளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியசீலன்( 27). இவர் சென்னையில் தனியார் வங்கி ஒன்றில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். பொங்கல் விடுமுறைக்கு ஊருக்கு வந்த அவர், தனது வீட்டில் டிவி யை ஆன் செய்வதற்காக ஸ்விட்ச்சில் கை வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் தாக்கி அங்கேயே சுருண்டு விழுந்துள்ளார். இதனை வீட்டின் வாசலில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த அவரது உறவினர் பால்சாமி(60) என்பவர் ஏதோ பூச்சி கடித்து விழுந்து விட்டதாகக் கூறிக்கொண்டே அவரைப் போய் தூக்கி உள்ளார். அவரையும் மின்சாரம் தாக்கியுள்ளது

Advertisment

இந்த நிலையில், இருவரையும் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர் அங்கிருந்தவர்கள். அப்போது, அவர்களைப் பரிசோதித்த மருத்துவர், இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்களின் இரு உடல்களையும் உறவினர்கள் ஊருக்கு எடுத்துச் சென்றனர். பொங்கல் விடுமுறைக்கு வந்து வங்கி அதிகாரி உள்ளிட்ட 2 பேர் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment