திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பஜார் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம், திருடுப்போனதை தொடர்ந்து அதன் உரிமையாளர் தந்த புகாரின் அடிப்படையில் திருடிச் சென்றது யார் என அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/WhatsApp Image 2019-11-22 at 19.47.03.jpeg)
திருடுபோன இருசக்கர வாகனத்தை கள்ளச்சாவி போட்டு 45 வயதுள்ள ஒருவர் திருடி சென்றது தெரிந்தது. அவர் யார் என விசாரணை நடத்தியபோது, பெரிய வெங்கடசமுத்திரம் பகுதியை சேர்ந்த வளையல் வியாபாரி சேட்டு என்பவர் என தெரியவந்துள்ளது.
அதன்படி அவரை அவரது வீட்டில் வைத்து போலீஸார் நவம்பர் 22ந்தேதி இரவு கைது செய்தனர். கைது செய்த அவரிடம் விசாரணை நடத்தியபோது, வளையல் வியாபாரத்தில் அந்தளவுக்கு வருமானம் இல்லை அதனால் திருட்டு தொழிலில் ஈடுப்பட்டதாக கூறியதாக போலீஸ் வட்டாரத்தில் கூறினர். இருசக்கர வாகனம் மட்டுமா, அல்லது வேறு ஏதாவது திருட்டுகளில் ஈடுப்பட்டுள்ளரா என தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர்.
ஆம்பூர் நகரில் பலயிடங்களில் இருசக்கர வாகனங்கள், வங்கிக்கு வரும்வாடிக்கையாளர்களிடம் திருட்டு போன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us