Advertisment

செங்கல்பட்டில் நுழைந்த வெளிநாட்டுக்காரர்கள்; வசமாய் சிக்கியது எப்படி?

bangladesh 16 peoples enter in chengalpattu police action taken by vao complaint

செங்கல்பட்டு மாவட்டம்தையூர் பகுதியில் எவ்வித ஆவணங்களும் இன்றி சட்டவிரோதமாக இருந்து வந்த 16 பேர் மீதுபோலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Advertisment

செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்டதையூர் பகுதியில் சட்டவிரோதமாகத்தங்கி சாலைகளில் உள்ளகுப்பைகளைச் சேகரித்து பிழைப்பு நடத்திக் கொண்டிருந்த 16 பேர் மீது தையூர் வீஏஓ வேலு போலீசில் புகார் ஒன்றை கொடுத்தார். வீஏஓ கொடுத்த புகாரின் பேரில் விசாரணை செய்த போலீசார், அவர்கள்வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் 16 பேரும் வங்கதேசத்தில்இருந்து எவ்விதமான முறையான ஆவணங்களும்இல்லாமல் சட்டவிரோதமாக வந்துகுப்பைகளைச் சேகரித்து பிழைப்பு நடத்தி வந்துள்ளனர்என்பதும், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஆவணங்களின்றி இந்தியா வந்ததாகத்தெரிய வந்தது. மேலும் அவர்களிடம் பாஸ்போர்ட்களும்இல்லாதது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Advertisment

இவர்கள் மீது பாஸ்போர்ட் இல்லாமல் வந்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்நடவடிக்கையில் கேளம்பாக்கம் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். முறைகேடாக இந்தியா வந்து தையூர் பகுதியில் ஆறு மாத காலமாகத்தங்கி இருந்தது கேளம்பாக்கம் பகுதியில்பெரும் பரபரப்பைஏற்படுத்தி உள்ளது.

VAO police Chengalpattu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe