Skip to main content

ஓராண்டாக நகர்த்த முடியாத 108 அடி உயர பெருமாள் சிலை- தவிக்கும் தனியார் அமைப்பு

Published on 09/12/2018 | Edited on 09/12/2018

 

p

 

கர்நாடகா மாநிலம், தெற்கு பெங்களுரூ ஈஜீபுரா என்கிற பகுதியில் கோதண்டராமசுவாமி கோயில் உள்ளது. இந்த கோயில் கோதண்டராமசாமி தேவஸ்தானம் என்கிற தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமானது.


இந்த கோயில் சார்பில் ஈஜிபுராவில் பிரம்மாண்டமான பெருமாள் சிலை அமைக்க முடிவு செய்தனர். 11 முகங்கள், 22 கைகள் கொண்ட 64 அடி உயரம் கோதண்டராம சுவாமி, 44 அடி உயரம் கொண்ட 7 தலை கொண்ட ஆதிசேஷன் சிலை என இரண்டு சிலைகள் தனித்தனியாக செதுக்கி 108 உயரத்தில் அமைப்பது என முடிவு செய்தனர்.

 

p


இவ்வளவு பெரிய சிலை செய்ய கற்கள் எங்குள்ளது என கூகுள் நிறுவனத்தினருடன் சேர்ந்து சேட்டிலைட் வழியாக தேடியபோது, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கொரக்கோட்டை கிராமத்தில் உள்ள நீள வாக்கிலான குன்றில் இருப்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து இதுப்பற்றி தமிழகரசு மூலம் மாவட்ட நிர்வாகத்திடம் முறையாக அனுமதி பெற்று கற்களை லேசர் மூலமாக கட் செய்து தனியாக எடுத்து சிலைகளை உருவாக்கினர்.


சிலைகள் உருவாக்கும் பணிகள் இரண்டு ஆண்டுக்கு முன்பு முடிந்தது. அந்த சிலைகளை தற்போது அந்த இடத்தில் இருந்து பெங்களுரூவுக்கு கொண்டு செல்ல வேண்டும். தேகூரில் இருந்து தெள்ளார், தெள்ளாரில் இருந்து திண்டிவனம் பைபாஸ், திண்டிவனம், செஞ்சி, திருவண்ணாமலை, செங்கம், கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாக பெங்களுரூ செல்ல வேண்டும்.

 

p


இதற்காக கடந்த 2017 ஆம் ஆண்டு அந்த தனியார் அறக்கட்டளை முயற்சி செய்தது. இதற்காக கார்கோ கண்டெய்னர் ( 160 டயர்கள் பொருத்தப்பட்டது ) வண்டியில் ஒருச்சிலையை ஏற்றினர். மற்றொரு சிலையில் அதைவிட சிறிய கார்கோ கண்டெய்னரில் ஏற்றினர். இதற்காக பெரிய கிரேன்கள், நூற்றுக்கணக்கான பணியாளர்கள் பணியாற்றினர். பெரும் முயற்சிக்கு பின் சிலைகள் கார்கோவில் ஏற்றப்பட்டது. ஏற்றப்பட்ட இடத்தில் இருந்து 50 மீட்டர் கூட அந்த கார்கோ கண்டெய்னரால் போக  முடியவில்லை. இதனால் கொண்டு செல்லும் பணி தடைபட்டது.


இந்நிலையில் ஓராண்டுக்கு பின் 2018 டிசம்பர் 6ந்தேதி, ஒரளவு எடை குறைக்கப்பட்ட அந்த சிலைகள், 240 டயர்கள் பொருத்தப்பட்ட கார்கோ கண்டெய்னரில் ஏற்றப்பட்டது. முதல் சிலை 350 டன்னும், இரண்டாவது சிலை 200 டன்னும் அளவு கொண்டது. ஏற்றப்பட்ட அந்த சிலைகள் 100 மீட்டர் தூரத்துக்கே வந்தது. இதற்கே 5 நாட்களானது. அந்த வாகனத்தின் டயர்கள் பாரம் தாங்காமல் வெடிக்கின்றன. இதுவரை 6 டயர்கள் வெடித்ததாக கூறுகின்றனர். அதை சரி செய்துக்கொண்டு 5வது நாளாக பயணம் செய்ய முயல்கிறது அந்த கார்கோ கண்டெய்னர். ஆனால் அதனால் முடியவில்லை.


இந்நிலையில் அந்த சிலைகளை கடந்த டிசம்பர் 7ந்தேதி மாலை அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார். பின்னர் இந்த கண்டெய்னர்க்கு முன்னும், பின்னும் பைலட் வாகனம் செல்ல அறிவுறுத்தினார். இந்த சிலை கோயிலுக்கு சரியாக போய் சேரவேண்டுமென பெருமாள் பக்தர்கள் பஜனை செய்வதோடு, கடவுளை பிரார்த்திக்கின்றனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

குடும்பத் தகராறு; 3 குழந்தைகளுடன் விபரீத முடிவெடுத்த மனைவி

Published on 30/01/2023 | Edited on 30/01/2023

 

karnataka vijayapura district husband and wife incident 3 children involved 

 

கர்நாடகாவில் கணவன் மனைவிக்கு இடையே தொடர்ந்து ஏற்பட்டு வந்த குடும்பத் தகராறு காரணமாக மனைவி தனது மூன்று குழந்தைகளையும் கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

கர்நாடகாவில் உள்ள விஜயபுரா மாவட்டம் ஜாலகிரி என்ற கிராமத்தை சேர்ந்தவர் ராமு சவுகான். இவரது மனைவி கீதா (வயது 32). இவர்கள் இருவருக்கும் ஆறு வயதில் ஒரு மகளும், நான்கு மற்றும் மூன்று வயதில் இரு மகன்களும் உள்ளனர். இந்நிலையில், கணவன் மற்றும் மனைவி  இடையே தொடர்ந்து குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கீதா விரக்தியில் இருந்து வந்துள்ளார்.

 

கணவருடன் சேர்ந்து வாழ விரும்பாத கீதா தற்கொலை செய்து கொள்ளும் முடிவை எடுத்துள்ளார். அப்போது குழந்தைகளை விட்டுப் பிரிய மனமில்லாமல் தனது வீட்டின் அருகே உள்ள தரைமட்டத் தண்ணீர் தொட்டியில் மூன்று குழந்தைகளையும் வீசிக் கொன்றுள்ளார். அதன் பின்னர் தானும் அந்த தொட்டியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தரைமட்டத் தொட்டியில் குடிநீர் எடுக்கச் சென்ற மக்கள் இதைக்கண்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார்  இது குறித்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். 

 

 

Next Story

சிப்ஸ் பாக்கெட்டுகளில் இருந்த 500 ரூபாய் நோட்டுகளால் கடைகளில் குவிந்த மக்கள்

Published on 17/12/2022 | Edited on 17/12/2022

 

chips pocket money in karnataka people and children are  happy 

 

சிப்ஸ் போன்ற தின்பண்டங்களை எப்போதும் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவது உண்டு. ஆனால், கர்நாடகாவில் தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த சிப்ஸ் பாக்கெட்டுகளை கூட்டம் கூட்டமாக வாங்கிச் செல்கின்றனர்.

 

கர்நாடக மாநிலம் ரெய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள உண்ணூர் கிராமத்தில் கடந்த நான்கு நாட்களாக அங்குள்ள கடைகளில் விற்கப்படும் சிப்ஸ் பாக்கெட்டுகளில் 500 ரூபாய் நோட்டுகள் உள்ளதாகப் பரவிய தகவலால், பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை போட்டிப் போட்டு சிப்ஸ் பாக்கெட்களை வாங்கிச் செல்கின்றனர். இதனால், கடைகளில் உள்ள சிப்ஸ் பாக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து உள்ளன. குறிப்பிட்ட சில நிறுவனங்களின் பெயரில் விற்கப்படும் சிப்ஸ் பாக்கெட்டுகளில் 500 ரூபாய் நோட்டுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதன்மூலம்  அக்கிராமத்தில் உள்ளவர்கள் இதுவரைக்கும் தங்களுக்கு சுமார் முப்பதாயிரம் ரூபாய் வரை கிடைத்துள்ளதாகத் தெரிவித்தனர்.

 

மீண்டும் அதே நிறுவனங்கள் பெயரில் கடைகளில் விற்பனைக்கு வந்த சிப்ஸ் பாக்கெட்டுகளில் பணம் ஏதும் இல்லாததால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இச்செயலானது,  சிப்ஸ் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் பெயரைப் பிரபலமாக்குவதற்கு இதுபோன்று செய்துள்ளதாகவும், சிப்ஸ் பாக்கெட்டுகளில் இருந்த ரூபாய் நோட்டுகள் உண்மையான நோட்டுகள்தானா என்ற சந்தேகம் தங்களுக்கு இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் உள்ளவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.