Banana trader  lost their life

ஈரோடு மாவட்டம், பவானியை அடுத்துள்ள குப்பிச்சிபாளையம், சடையப்பன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் முனியப்பன் (52). வாழைக்காய் வியாபாரி. இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று மாத்திரை சாப்பிட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் நோய் பாதிப்பால் மனமுடைந்த முனியப்பன் நேற்று காலையில் பூச்சி மருந்தை குடித்துவிட்டார். இதையறிந்த அவரது மகன் அசோக்குமார் (25) அவரை மீட்டு, பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு முதலுதவி சிகிச்சையளித்தும் பலனின்றி முனியப்பன் உயிரிழந்தார். இதுகுறித்து, பவானி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.