கடும் வறட்சி என்றாலும், அதிக மழைப்பொழிவு என்றாலும்பாதிப்பு என்னவோ பரிதாபத்துக்குரிய விவசாயிகளுக்குத்தான்.ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 50,000 ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி நடந்து வருகிறது. நேற்று பெய்த கனமழையால் சூறைக் காற்று வீசியதால் அங்கிருந்த50,000 வாழை மரங்களும் அடியோடு சாய்ந்தது.இந்த வாழை மரங்கள் அறுவடைக்கு தயாராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
செவ்வாழை முதல் பலதரப்பட்ட வாழைப்பழங்கள் பயிரிடப்பட்டு முழுமையாக அறுவடை நடக்க இருக்கும் நிலையில், நேற்று பெய்த கனமழை மற்றும் சூறைக்காற்றால் மரங்கள் சாய்ந்திருக்கிறது. ஏற்கனவே கரோனாவைரஸ் ஊரடங்கு காலத்தில், சாகுபடிக்கு தயாராக இருந்தவாழைப் பழங்களை வெட்டி விற்பனை செய்ய முடியாத நிலையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் வேதனையில் இருந்தனர்.
அவர்களுக்குள் தங்களின்உழைப்பின் மூலமாக விளைந்தஅந்த வாழை மரங்களால்,தங்களுக்கு கொள்முதல் விலையை கூட கொடுக்க முடியாமல்போய்விட்டது என்ற கவலை இருந்தது. இந்தநிலையில் தற்போது விற்பனைக்கு தயாராக கொண்டு செல்ல இருந்த பழங்கள்,சூறைக்காற்றால் மரங்களோடுசாய்ந்திருக்கிறது. இதனால் கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளார்கள், பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கவலையுடன் தெரிவிக்கிறார்கள். மத்திய,மாநில அரசுகள் தனிநபர் பயிர் பாதுகாப்பு காப்பீட்டு திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்பதோடு, தற்போது இழப்புக்கு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு அரசு நிவாரணம் மூலம் வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்கள்.