schoool

தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இன்று முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisment

தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இன்று முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்திக்கொள்ள பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Advertisment

இதுதொடர்பாக தமிழக பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘’அனைத்து பள்ளிகளிலும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை நிறுத்த வேண்டும். அதற்கு மாற்றாக உள்ள பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இன்று முதல் இந்த தடை அமலுக்கு வருகிறது. பள்ளி வளாகத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத பள்ளிவளாகம் என்ற பெயர் பலகை வைக்க வேண்டும்’’என்று கூறப்பட்டுள்ளது.

Advertisment