The ban period is coming to an end - Tamil Nadu fishermen are getting ready

மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி தடை காலத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் மீன்பிடி தடைகாலம் அறிவிக்கப்படும். இந்நிலையில் தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது.

மொத்தமாக 61 நாட்கள் தடைகாலம் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் வரும் ஜூன் 14ஆம் தேதியோடு மீன்பிடி தடை காலம் முடிவடைய இருப்பதால் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல மீனவர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். ராமேஸ்வரம் மீனவர்கள் விசைப்படகுகளை தயார் செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மராமத்து பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் மீன்பிடி உபகரணங்களின் விலை அதிகரித்துள்ளது. இருப்பினும் வெகு நாட்களுக்குப் பிறகு மீண்டும் உற்சாகமாக மீன் பிடிக்க மீனவர்கள் தயாராகி வருகின்றனர்.