'Ban on online gambling' - Filed in the Assembly

Advertisment

சென்னை கலைவாணர் அரங்கில்கடந்த2 ஆம் தேதிதமிழக சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் துவங்கியநிலையில், இன்று (04.02.2021) ஆன்லைன்சூதாட்டத்திற்குத்தடை விதிப்பதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்குத் தடை விதித்து அரசாணை வெளியிடப்பட்டிருந்த நிலையில்,ஆன்லைன்சூதாட்டத்திற்குஅவசரச் சட்டத்தின் மூலம் தடையும்விதிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் இன்று நடைபெற்றபேரவைக் கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்தைத்தடைசெய்த அரசாணையைசட்டமாக்குவதற்கானமசோதாவை துணை முதல்வர் ஓபிஎஸ் தாக்கல்செய்தார்.தடையை மீறி ஆன்லைன்சூதாட்டத்தில் ஈடுபட்டால் 5 ஆயிரம் அபராதம்,6 மாதம் சிறைதண்டனை கொடுக்க இந்த சட்டம் வழிவகை செய்கிறது.

அதேபோல், உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் மசோதாவும் இன்று பேரவையில்தாக்கல் செய்யப்பட்டது.