Advertisment

தொட்டபெட்டா செல்ல தடை

nn

உதகையில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு மூன்று நாட்களுக்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகமும், சுற்றுலா துறையும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisment

நீலகிரி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று தொட்டபெட்டா சிகரம். தொட்டபெட்டா சாலையை சீரமைக்க வேண்டும் என பல்வேறு தரப்புகளில் இருந்து கோரிக்கைகள் எழுந்த நிலையில், கோத்தகிரி முதல் தொட்டபெட்டா சிகரம் வரை உள்ள சுமார் மூன்று கிலோ மீட்டர் நீளம் கொண்ட சாலையை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலத்தில் சாலை சீரமைப்புகாரணமாக நாளை முதல் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு செல்வதற்கான பாதை தற்காலிகமாக மூடப்படும் என சுற்றுலாத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Advertisment

Tourists nilgiris
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe