விமான நிலையத்தைச் சுற்றி ட்ரோன்கள் பறக்கத் தடை!

Ban on flying drones around the airport!

சுதந்திர தினத்தையொட்டி, கோவை சர்வதேச விமான நிலையத்தை ஒட்டியிருக்கும் பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் பதுகாப்புஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மோப்ப நாய்கள் குழுவும், குண்டுவெடிப்பு தடுப்புக் குழு நிபுணர்களும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கூடுதல் பாதுகாப்பாக விமான நிலையத்தைச் சுற்றி இருக்கும் பகுதிகளில் ட்ரோன் பறக்கத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட காவல் ஆணையரின் அனுமதியின்றி ட்ரோன் பயன்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

airport Coimbatore
இதையும் படியுங்கள்
Subscribe