Skip to main content

விமான நிலையத்தைச் சுற்றி ட்ரோன்கள் பறக்கத் தடை!

Published on 12/08/2022 | Edited on 12/08/2022

 

Ban on flying drones around the airport!

 

சுதந்திர தினத்தையொட்டி, கோவை சர்வதேச விமான நிலையத்தை ஒட்டியிருக்கும் பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

 

கோவை ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் பதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மோப்ப நாய்கள் குழுவும், குண்டுவெடிப்பு தடுப்புக் குழு நிபுணர்களும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கூடுதல் பாதுகாப்பாக விமான நிலையத்தைச் சுற்றி இருக்கும் பகுதிகளில் ட்ரோன் பறக்கத்தடை விதிக்கப்பட்டுள்ளது. 

 

கோவை மாவட்ட காவல் ஆணையரின் அனுமதியின்றி ட்ரோன் பயன்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.   

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தமிழ்நாடு பிடிக்கும் என்று பிரதமர் பேசுவதெல்லாம் போலிப்பாசம்” - முதல்வர் விளாசல்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Everything that the PM says about liking Tamilnadu is hypocrisy

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இத்தகைய சூழலில் கோவை செட்டிபாளையத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியும் நேற்று (12.04.2024) ஒரே மேடையில் பரப்புரை மேற்கொண்டனர். இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில் இது தொடர்பான வீடியோ காட்சி ஒன்றையும் இணைத்துள்ளார்.

மேலும் அந்த பதிவில், “கோவையில் கூடிய கூட்டம் டெல்லியில் ஏற்படவுள்ள நல்ல மாற்றத்திற்கான அடையாளம். அமைதியை விரும்பும் கோவைக்குள் கலவரக் கட்சியான பாஜக நுழையலாமா?. தொழில் வளர்ச்சி போய்விடாதா? நிறுவனங்களை நிம்மதியாக நடத்த முடியுமா?. கோவைக்கு வரவிருந்த மிகப்பெரும் தொழில்திட்டத்தை மிரட்டி குஜராத்துக்கு அனுப்பியது பாஜக. கோவை மேல் ஏன் இத்தனை வன்மம்?. தமிழ் - தமிழ்நாடு பிடிக்கும் என்று பிரதமர் பேசுவதெல்லாம், போலிப்பாசம். வெறும் வெளிவேடம். மக்களோடு மக்களாக வாழ்ந்து, கழகத்தின் கொள்கை உடன்பிறப்பாக என் அன்பு சகோதரர் ராகுல் காந்தி உருவாக்கியிருக்கும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள் நிறைவேற இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

அன்பு பரிசு வழங்கிய ராகுல் காந்தி; முதல்வர் மு.க. ஸ்டாலின் நெகிழ்ச்சி!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Rahul Gandhi who gave the gift of love CM MK Stalin resilience

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இத்தகைய சூழலில் கோவை செட்டிபாளையத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுயும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியும் நேற்று (12.04.2024) ஒரே மேடையில் பரப்புரை மேற்கொண்டனர். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பாக சிங்காநல்லூர் பகுதியில் உள்ள சாலையின் தடுப்புச் சுவரை தாண்டி குதித்து ஒரு ஸ்வீட் கடைக்குச் சென்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்காக இனிப்பு வாங்கும் வீடியோ ஒன்றை ராகுல் காந்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில், அங்குள்ள ஊழியர்கள், கடையின் உரிமையாளர் ஆகியோர் அவரை வரவேற்று அவருடன் கைகுலுக்கி மகிழ்கின்றனர். அப்போது அருகில் இருந்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கடை ஊழியரிடம் மைசூர் பாக் கொடுங்கள் என்று கேட்கிறார். யாருக்காக ஸ்வீட் வாங்குகிறீகள் சார் என்று கடையில் பணிபுரியும் பெண் பணியாளர் ஒருவர் கேட்கிறார். அவரிடம் என் சகோதரர் ஸ்டாலினுக்காக என ராகுல் பதிலளிக்கிறார்.

அதனைத் தொடர்ந்து கடையில் பணிபுரியும் ஊழியர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு அங்கிருந்து ராகுல் காந்தி, விடைபெற்றார். அதன் பின்னர் பொதுக்கூட்டத்தில் தான் வாங்கி வந்த இனிப்பை முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் ராகுல் காந்தி கொடுத்தார். அதனை முதல்வர் மு.க ஸ்டாலினும் மிகவும் மகிழ்ச்சியாகப் பெற்றுக் கொண்டார். மேலும் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒரு கணம் நெகிழ்ச்சி அடைந்தார். இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ராகுல் காந்தி, “தமிழ்நாட்டில் தொடர் பிரச்சாரத்துக்கு இன்னும் கொஞ்சம் இனிப்பை சேர்க்கிறேன். என்னுடைய சகோதரர் ஸ்டாலினுக்காக கொஞ்சம் மைசூர் பாக் வாங்கினேன்” என குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.