தஞ்சையில் நடந்த விழா ஒன்றில் பேசிய திரைப்படஇயக்குனர் பா.ரஞ்சித் ராஜராஜ சோழன் பற்றி அவதூறாக பேசியது தொடர்பாக திருப்பனந்தாள் காவல்நிலையத்தில்வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அடுத்து தன்னை கைது செய்ய தடைக்கோரி இயக்குனர் ரஞ்சித் உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் முன்ஜாமீன் தாக்கல் செய்திருந்தார்.

Advertisment

ranjith

இந்த முன்ஜாமீன் வழக்கு விசாரணைதொடர்ந்து நடந்துவருகின்ற நிலையில் இன்று நடந்த விசாரணைக்கு பிறகுபா.ரஞ்சித்தின் முன்ஜாமீன் விசாரணையை ஜூன் 21 ஆம் தேதி ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற கிளை, மேலும் ஜூன் 21 ஆம் தேதி வரை கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளக்கூடாது என போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்ததுநீதிமன்றம்.

Advertisment

இந்த வழக்கில் தங்களையும் எதிர்மனுதாரராக சேர்க்கக் கோரி முத்துக்குமார் என்பவர் மனுதாக்கல் செய்திருந்தார்.மனுவில் சில திருத்தங்கள் இருப்பதால் அதனை சரிசெய்ய அவகாசம் வழங்கி வழக்கைஒத்திவைத்தது நீதிமன்றம்.