Skip to main content

வாக்குப்பெட்டி பத்திரம்... கலெக்டருக்கு ஆலோசனை சொன்ன தி.மு.க. மா.செ

Published on 26/12/2019 | Edited on 26/12/2019

நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் எந்தவித முறைகேடும் நடக்காமல் அதிகாரிகள் நடுநிலையுடன் செயல்படுங்க என ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான கதிரவன் மற்றும் ஈரோடு மாவட்ட தேர்தல் பார்வையாளர் விவேகானந்தன் ஆகியோரை இன்று நேரில் சந்தித்து பேசினார்கள் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் முத்துசாமி மற்றும் கூட்டணி கட்சியினர்.

இது பற்றி மா.செ. முத்துச்சாமி கூறியதாவது,

"ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் பணிகள் குறித்து கலெக்டரிடமும் மாவட்ட தேர்தல் பார்வையாளரிடமும் பேசினோம். நாங்கள் சில கோரிக்கைகளை அவர்களிடம் வைத்தோம்.

 

Ballot paper... DMK advised Collector


மாவட்டத்தில் பதட்டமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் கவனம் செலுத்தி தனி அதிகாரியை அங்கு நியமிக்க வேண்டும் என்றும் நாளை நடைபெறும் ஓட்டுப்பதில் எந்த தவறுகளும் நடைபெறாமல் இருக்க அதிகாரிகள் நடுநிலையுடன் செயல்பட வேண்டும் குறிப்பாக வாக்குச்சாவடிகளை ஆளுங்கட்சியினர்  கைப்பற்றுதல், அவர்கள் கள்ள ஓட்டு போடுதல் போன்றவை எங்கும் நடைபெறாமல் இருக்க தேர்தல் அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும். என்றோம் மேலும் வாக்குப்பதிவு முடிந்தவுடன் தேர்தல் ஓட்டுப் பெட்டிகள் மிகவும் பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

வாக்கு பெட்டிகள் இருக்கும் இடத்தில் முழுமையாக கேமரா பொருத்த வேண்டும் என்று கூறினோம் அதோடு எங்களது முக்கிய கோரிக்கையாக வாக்கு எண்ணும்போது ஒவ்வொரு சுற்றின் முடிவில் அந்தந்த வேட்பாளர்கள் பெற்ற வாக்கு எண்ணிக்கை, மற்றும் செல்லாத வாக்குகள் அப்போதே அறிவிக்கப்பட்டு விட்டு  பிறகு அடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என கோரினோம். அதேபோல் பாதுகாப்பு அறையில் இருந்து எண்ணிக்கைக்காக வாக்குப்பெட்டிகள் எடுத்து வந்த பின்னர் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை வேட்பாளர்கள் அல்லது அவர்களின் முகவர்கள் பார்வையில் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வைத்தோம்.

எங்களது கோரிக்கைகளை கேட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் பார்வையாளர் அதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதிகொடுத்தனர்" என்றார். சு.முத்துச்சாமியுடன் தி.மு.க.நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினரும் உடன் இருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்