Died

கடலூர் மாவட்டம்காட்டுமன்னார்கோயில் அடுத்துள்ள கருணாகர நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன். வயது 38. இவர் இன்று காலை வீராணம் ஏரிக்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது தண்ணீரில் மூழ்கி பலியானார்.

Advertisment

அப்போது அருகில் இருந்தவர்கள் உடலை மீட்டு காட்டுமன்னார்கோயில் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்திற்க்கு வந்த காவல்துறை ஆய்வாளர் சியாம் சுந்தர் மற்றும் போலிசார் கிராம நிர்வாக அலுவலர் கமல்ராஜ் ஆகியோர் அந்த பகுதியை பார்வையிட்டு உடலை மீட்டு காட்டுமன்னார்கோயில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisment

இது குறித்து காட்டுமன்னார்கோயில் இன்ஸ்பெக்டர் சியாம் சுந்தர் விசாரணை நடத்தி வருகிறார். பாலமுருகனுக்கு ரமா என்ற மனைவியும், சுகன் பிரியன் என்ற மகனும் சந்தியா என்ற மகளும் உள்ளனர்.