ADVERTISEMENT

மாணவர்கள் போராட்டம் தோற்றதாக வரலாறு கிடையாது; குடியுரிமை சட்டத்திலும் அது நிறைவேறும்; திருவாரூரில் பாலகிருஷ்ணன் பேச்சு

08:58 AM Dec 20, 2019 | kalaimohan

"ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பது போல தங்கள் ஆட்சிக்கு பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக பாஜக இந்து முஸ்லீம் கலவரத்தை ஏற்படுத்துகிறது." என்கிறார் மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்.

ADVERTISEMENT

ADVERTISEMENT


திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடி கடைவீதியில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மார்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே,பாலகிருஷ்ணன் பிரச்சாரம் மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,

"பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் எவ்வளவு பட்டாலும் புத்திவரவில்லை. திமுகவிற்கு எதிரான பாஜகவின் போராட்ட அறிவிப்பு என்பது இப்போதே தங்களது தோல்வியை ஒப்புக்கொண்டு எதிர்க்கட்சிக்கான வேலையை ஆரம்பித்து விட்டனர். ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பது போல தங்கள் ஆட்சிக்கு பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக பாஜக இந்து முஸ்லீம் கலவரத்தை ஏற்படுத்துகிறது

இந்திய குடியுரிமை சட்டத்துக்கு எதிரான மாணவர்கள் போராட்டம் வலுவாக உள்ளது. மாணவர்கள் போராட்டம் தோற்றதாக வரலாறு கிடையாது. அதே வரலாறு இந்த குடியுரிமை சட்டத்திலும் நிறைவேறும்" என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT