Advertisment

சென்னை பெருங்குடி கொலை வழக்கு; நீதிமன்றத்தில் பாலகிருஷ்ணன் ஆஜர்!!

 murder

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

மனைவியைதுண்டு துண்டாக கொன்று வீசிய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சினிமா இயக்குனர்பாலகிருஷ்ணன் தற்போது ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார்.

Advertisment

கடந்த 21 ஆம் தேதி சென்னை பெருங்குடி குப்பை கிடங்கில் கண்டெடுக்கப்பட்ட வெட்டப்பட்ட கை, கால்களை ஆதாரமாகக் கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில் கொல்லப்பட்டவர் தூத்துக்குடியைச் சேர்ந்த சந்தியா என்பதும், திரைப்பட இயக்குனரான பாலகிருஷ்ணனை அவரை கொலை செய்து உடல் பாகங்களை வெட்டி மூன்று இடங்களில் தனித்தனியாக வீசியது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட சந்தியாவின் தலையை பள்ளிக்கரணை குப்பை கிடங்கில் போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தில் சந்தியாவின் கழுத்து முதல் இடுப்பு வரையிலான உடல் நேற்று அடையாறு பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.

தலை இடது கையுடன் கூடிய உடற்பகுதியை காவல்துறையினர், மாநகராட்சி ஊழியர்களுடன் பள்ளிக்கரணை குப்பை கிடங்கில் தேடிவருகின்றனர். அதேசமயம் சந்தியாவை கொலை செய்த அவரது கணவர் பாலகிருஷ்ணன் மீது இரண்டு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுஆலந்தூர் நீதிமன்றத்தில் தற்போதுஆஜர்படுத்தபட்டுள்ளார்.

Chennai police murder
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe