Advertisment

விஜயகாந்த் -ராவுத்தரை பிரித்ததுதான் என்னையும் பாலாவையும் பிரித்தது! அமீர்

நீண்ட இடைவெளிக்கு பின்னர் ராவுத்தர் பிலிம்ஸ் தயாரிக்கும், எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் அமீர், சினிமாவின் புகழ் வெளிச்சம் நிரந்தரமில்லை. சினிமாவால் நட்பையும் இழக்க நேரிடுகிறது என்று தெரிவித்தார்.

Advertisment

b

அவர் பேசியபோது, ’’சினிமாவுக்கு வர துடித்துக்கொண்டிருந்த விஜயகாந்தை மதுரையில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்து, வாய்ப்புகள் வாங்கிக்கொடுத்து, பார்த்து பார்த்து...சினிமாவில் விஜயகாந்தை செதுக்கியவர் இப்ராகிம் ராவுத்தர். கடைசியில் அவரை இந்த சினிமா பிரித்துவிட்டது. உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த ராவுத்தரை பார்த்து கண்ணீர் விட்டார் விஜயகாந்த். அந்த கண்ணீர்தான் நட்புக்கான நிஜம்.

r

Advertisment

நானும் பாலாவும் மதுரையில் இருந்து ஒன்றாகத்தான் சென்னைக்கு வந்தோம். இன்றைக்கு பாலா போன் நம்பர் எனக்கு தெரியாது. என் போன் நம்பர் பாலாவுக்கு தெரியாது. சசிக்குமார் என்னிடம் இருந்தான். இன்றைக்கு என் போன் நம்பர் அவனிடம் இருக்காது. அவர் போன் நம்பரும் என்னிடம் இல்லை. சினிமாதான் எங்களை பிரித்தது.

சினிமாவில் எதுவும் நிரந்தரமில்லை. நல்ல நண்பர்களையும் இந்த சினிமாவால் இழக்க நேரிடும்’’ என்று தெரிவித்தார்.

ameer bala
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe