Skip to main content

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்திற்கு யார் காரணம்? படவிழாவில் பரபரப்பை ஏற்படுத்திய பாக்யராஜ்

Published on 26/11/2019 | Edited on 26/11/2019

 

கருத்துக்களை பதிவு செய் திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.  இவ்விழாவில் பங்கேற்ற இயக்குநர் கே.பாக்யராஜ் தனது கருத்துக்களை பதிவு செய்தார்.  அவரின் பதிவுகள் படவிழாவில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.  

 

k

 

பாக்யராஜ் பேசியபோது,  ‘’டெலிபோன் என்ற ஒன்று வந்தபின்னர் பெண்களிடம் கட்டுப்பாடு இல்லாமல் போய்விட்டது.  எங்கு பார்த்தாலும் செல்போனை வைத்துக்கொண்டு கிசுகிசு என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.  ஆண்கள் தவறு செய்தால் அது போற போக்குல நடந்துடும். பெண்கள் அந்த விசயத்துல தவறு செய்தால் அது மிகப்பெரிய தப்புல கொண்டுபோய் விட்டுவிடும்.   சொல்லும்போது கஷ்டமாக இருக்கிறது.  ஆனாலும் வேற வழியில்லை.  சொல்லித்தான் ஆகவேண்டும்.   ஆண் சின்ன வீடு வைத்துக்கொண்டால் அந்த வீட்டுக்கு சகல வசதிகளும் செய்து கொடுத்துவிடுவான்.   அதே நேரத்தில் பெரிய வீட்டை தொந்தரவு செய்யமாட்டான்.  

 

b

 

பெண்களிடம் அந்த கட்டுப்பாடு இல்லை. அதனால்தான், கள்ளக்காதலால் கணவனை அடித்துக்கொன்ற மனைவி, குழந்தையை அடித்துக்கொன்ற தாய் என்று செய்திகள் வருகின்றன.  பெண்கள் இடம் கொடுப்பதால்தான் தவறுகள் நடக்கின்றன.  ஆண்களை குறை சொல்லி பிரயோசனமில்லை.  பொள்ளாட்சி பாலியல் விவகாரத்திற்கு பெண்கள்தான் காரணம்.   பொள்ளாட்சி விவகாரத்தில் பெண்களின் பலவீனத்தை பயன்படுத்திக்கொண்டு போய்விட்டான்.  அவன் செய்தது பெரிய தவறு என்றால், அந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த பெண்கள் செய்ததும் தவறு’’என்று தெரிவித்தார்.   

 

சார்ந்த செய்திகள்

Next Story

"அந்தப் படத்தில் அவரது திறமையைப் பிரம்மித்து பார்த்திருக்கிறேன்" - நடிகர் பாக்யராஜ் பேச்சு

Published on 29/10/2022 | Edited on 29/10/2022

 

"I was in awe of his talent in that film" - actor Bhagyaraj talks!

 

'Trident Arts' ஆர்.ரவீந்திரன் மற்றும் ஏ.ஆர். என்டர்டெயின்மென்ட் அஜ்மல் கான், ரெயா தயாரிப்பில் இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில், கோவை சரளா, அஷ்வின்குமார் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் “செம்பி”. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பத்ம பூஷன் உலகநாயகன் கமல்ஹாசன் தலைமையில், திரைப்பிரபலங்கள் கலந்து கொள்ள கோலாகலமாக நடைபெற்றது. 

 

விழாவில் பேசிய நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ், "கமல் விழாவுக்கு வந்தால் படம் ஜெயிக்கும் என்று இங்கு சொன்னார்கள். அந்த ராசி எனக்கும் இருக்கு. அவர் நடித்த 16 வயதினிலே தான் எனக்கும் ஆரம்பம். அந்தப் படத்தில் அவரது திறமையைப் பிரமித்து பார்த்திருக்கிறேன். அதேபோல் கோவை சரளா அவர்களை எட்டு வயதிலிருந்தே எனக்குத் தெரியும். முந்தானை முடிச்சு படத்தில் என்னிடம் அடம் பிடித்து நடித்தார். அவரை மனோரமா போல் என்றார்கள், அது உண்மையான கருத்து. இந்தப் படத்தில் நடிப்பில் அசத்தியிருக்கிறார். பிரபு சாலமன் மிகச்சிறந்த இயக்குநர். கும்கி படத்தில் அவரைப் பார்த்து பிரம்மித்தேன். இந்தப் படம் டிரெய்லரே அற்புதமாக இருக்கிறது. படம் வெற்றி பெற வாழ்த்துகள்" என்றார்.

 

அதைத் தொடர்ந்து பேசிய நடிகை கோவை சரளா, "இந்தப் படத்தின் ஹீரோ பிரபு சாலமன் சார் தான். அவர் படத்தில் நடிப்பது ஈஸி. அவர் சொல்வதைக் கேட்டு, அதை செய்தால் மட்டும் போதும், பிரமாதமாக வந்துவிடும். இங்கு வந்து வாழ்த்திய அனைத்து பெருமக்களுக்கும் என் நன்றிகள்" எனக் கூறினார். 


 

Next Story

37 ஆண்டுகளுக்குப் பிறகு 'ரீமேக்' செய்யப்படும் பாக்கியராஜ் படம்!

Published on 27/02/2021 | Edited on 27/02/2021

 

Pakkiyaraj's film to be remade after 37 years

 

பிரபல நடிகர் பாக்கியராஜ் நடித்த ‘முந்தானை முடிச்சு’ படத்தை இயக்குனர் எஸ்.ஆர். பிரபாகரன் இயக்கத்தில் ரீமேக் செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'முந்தானை முடிச்சு' பாக்கியராஜ் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம். ஏவிஎம் தயாரிப்பில் வெளியான இந்தப் படத்தில் ஊர்வசி, தீபா. கே.கே.சொளந்தர், சத்யா உள்ளிட்ட பலர் பாக்யராஜுடன் நடித்தனர்.

 

மேலும், 37 ஆண்டுகளுக்குப் பிறகு ‘முந்தானை முடிச்சு’ படம் ரீமேக் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. இதற்கு கதை, திரைக்கதை மற்றும் வசனம் ஆகியவற்றை பாக்யராஜ் எழுதுகிறார். வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்ற முந்தானை முடிச்சு படத்தை தற்போது ஜே.எஸ்.பி. ஸ்டுடியோஸ் நிறுவனம் ரீமேக் செய்யவுள்ளது. இந்தப் படத்தில் பாக்கியராஜ் கதாபாத்திரத்தில் சசிகுமாரும், ஊர்வசி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷும் நடிக்கவுள்ளனர். எஸ்.ஆர். பிரபாகரன், சசிகுமார் நடித்த ‘சுந்தர பாண்டியன்’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்கள் கூட்டணியில் ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.