Skip to main content

பக்ரீத் பண்டிகை; களைகட்டிய பள்ளப்பட்டி ஆட்டு சந்தை! 

Published on 08/07/2022 | Edited on 08/07/2022

 

Bakrit festival;  Pallapatti Goat Market!

 

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டியில் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த மக்கள் அதிகப்படியாக வாழ்வதால் கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியில் பக்ரீத் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இதன் காரணமாக பள்ளப்பட்டியில் ஆண்டுதோறும் ஜூலை 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஆட்டு சந்தை நடைபெறும். அந்த வகையில் இன்று (ஜூலை 8) ஆட்டுச்சந்தை நடைபெற்றது.

 

இதையொட்டி கரூர், அரவக்குறிச்சி, திருப்பூர், காங்கேயம், ஈரோடு உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து அதிகாலையே வியாபாரிகள் சரக்கு ஆட்டோ, வேன், லாரி போன்ற வாகனங்களில் ஆடுகளை விற்பனைக்காக கொண்டுவந்தனர். இவற்றை வாங்குவதற்காக பொதுமக்களும் வியாபாரிகளும் என ஆயிரக்கணக்கானோர் சந்தையில் குவிந்தனர். இதனால் விற்பனை அமோகமாக நடந்தது.


பொதுவாக இந்த சந்தையில் 10 கிலோ எடை கொண்ட கிடா ஆடு ரூ. 12 ஆயிரம் என விற்பனையாகும். ஆனால் பக்ரீத் பண்டிகை விற்பனை என்பதால், சற்று விலை அதிகரிக்க பத்து கிலோ எடை கொண்ட ஆட்டின் விலை ரூ. 15 ஆயிரம் முதல் ரூ.16 ஆயிரம் வரை விற்பனைக்கு போனது. இந்தச் சந்தையில் ஜமுனாபுரி என்ற 65 கிலோ எடை கொண்ட ஆடு ரூ. 35 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

இருசக்கர வாகனத்தில் ஆட்டை திருடிய இருவர் கைது

Published on 02/10/2023 | Edited on 02/10/2023

 

 Two arrested for stealing a goat on a two-wheeler

 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் மாலை வேளையில் வந்த இருவர் ஆட்டை திருடிச் சென்றதாக புகார் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

மாட்டுவேலம்பட்டியை சேர்ந்தவர் குமரேசன். இவர் அவருடைய தோட்டத்தில் ஆடுகளை கட்டி வைத்திருந்தார். இந்நிலையில் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அத்தனூரைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் ஆட்டை திருடியது அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த வெண்ணந்தூர் காவல் நிலைய போலீசார் சர்மா, லோகேஷ் ஆகிய இரண்டு இளைஞர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Next Story

குடும்பத்துடன் காரில் வந்து ஆடுகள் கடத்தல்; போலீசார் விசாரணை

Published on 10/09/2023 | Edited on 10/09/2023

 

Arriving in a car with family and smuggling goats; Police investigation

 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கோனாமேடு, ஆசிரியர் நகர் ஆகிய பகுதிகளில் வசித்து வருபவர்கள் சிலர் ஆடுகளை வளர்த்து வருகின்றனர். இந்த ஆடுகள் காலை நேரத்தில் அவிழ்த்து விட்டால் சாலைகளில் உணவு தேடி அலைவதும், மாலை வீடுகளுக்கு செல்வது வழக்கம்.

 

இந்நிலையில் இன்று காலை ஆசிரியர் நகர், முதல் குறுக்கு தெருவில் ஆடுகள் சுற்றித் திறந்து கொண்டிருப்பதை பார்த்த காரில் குடும்பத்துடன் வந்த மர்ம நபர்கள் காரை நிறுத்தி குழந்தைக்கு ஆடுகளை காண்பிப்பது போல், ஆட்டுக்கு பிஸ்கட் கொடுத்து காரில் தூக்கி போட்டுள்ளார். இதேபோல் ஒன்றன்பின் ஒன்று என 4 ஆடுகளை திருடி காருக்குள் போட்டுக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

 

இதனை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தன் வீட்டுக்கு எதிரில் வெகு நேரமாக காரில் சிலர் ஆடுகளை திருடுவதைக் கண்டு தன்னுடைய செல்போனில் பதிவு செய்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ வைரலானதால் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.