Advertisment

இஸ்லாமியர்களின் புனித திருநாளாக கருதப்படும் பக்ரீத் பண்டிகை இன்று (01.08.2020) கொண்டாடப்படுகிறது. கரோனா அச்சுறுத்தல் கரணமாக வழிபாட்டுத்தளங்கள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, வீடுகளிலேயே பக்ரீத் பண்டிகையை கொண்டாட அறிவுறுத்தப்பட்ட நிலையில், சென்னை மண்ணடியில் தமுமுக சார்பில் பக்ரீத் தொழுகை நடத்தப்பட்டது.

இந்த தொழுகை நிகழ்வில் ஒரே குடும்பத்தை சேர்ந்த பலர் கலந்துகொண்டனர். அவர்களுடன் தமுமுக மாவட்ட தலைவர் துறைமுகம் மீரான் இணைந்து தொழுகையில் ஈடுபட்டார்.