Bakery owner's 4-year-old girl abducted-police investigation!

மதுரையில் பேக்கரி உரிமையாளரின் 4 வயது பெண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisment

மதுரை உசிலம்பட்டியில் உள்ள பிரபல பேக்கரி நிறுவனத்தின் உரிமையாளர் பார்த்தசாரதி-சத்யா தம்பதியினரின் நான்கு வயது மகள் திருமங்கலம் விலக்கு என்ற பகுதியில் உள்ள அவரது பாட்டி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத, ஆண் மற்றும் பெண் இருவரும் சேர்ந்து குழந்தையைக் கடத்தி சென்றனர். பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

பணத்திற்காக குழந்தை கடத்தப்பட்டதா அல்லது குழந்தை இல்லாத தம்பதிகளால் கடத்தப்பட்டதா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். வாசலில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.