திருச்சி மாவட்டம், முசிறி அய்யம்பாளையம் பகுதியில் பேக்கரி நடத்தி வருபவர் சிவானந்தம்(37). இவர் கடந்த 20ஆம் தேதி மாலை 4 மணியளவில் பேக்கரியில் பணியில் இருந்தபோது அங்குவந்த ஏவுர் கிராமத்தைச் சேர்ந்த தீபக்(19) என்ற வாலிபர் கேக், பப்ஸ் உள்ளிட்ட உணவு பண்டங்களை வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் சென்றுள்ளார். அவரிடம் சிவானந்தம் பணம் கேட்டத்திற்கு பேக்கரியில் வைத்திருந்த கண்ணாடி பெட்டிகளை உடைத்து தகராறு செய்துள்ளார். இதையடுத்து சிவானந்தம் முசிறி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து ஏவுர் கிராமத்தைச் சேர்ந்த தீபக் என்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.