'சிறுமியின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய்'-நிபந்தனை விதித்து மூவருக்கு ஜாமீன்

Bail for three on condition of `5 lakh to the girl's family'

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியில் அண்மையில் தனியார் பள்ளியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து மூன்று வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.

குறிப்பிட்ட பள்ளியில், பழனிவேல்- சிவசங்கரி ஆகிய தம்பதியின் மூன்று வயது குழந்தையான லியால் லட்சுமி எல்.கே.ஜி படித்து வந்தார். மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறைக்கு இரும்பால் மூடப்பட்ட கழிவுநீர் தொட்டி முழுவதுமாக சேதமடைந்து இருந்துள்ளது. அந்த சேதமடைந்த கழிவுநீர் பகுதியில், லியால் லட்சுமி விளையாடிக் கொண்டிருந்தார். கழிவுநீர் தொட்டி, மீது லியா லட்சுமி விளையாடும் போது அந்த இரும்புத்தகடு முழுவதுமாக நொறுங்கி விழுந்தது. இதில், அந்த குழந்தை கழிவுநீர் தொட்டிக்குள் திடீரென்று விழுந்துள்ளார்.

இதில் அந்த தொட்டிக்குள் விழுந்ததால் லியா லட்சுமி மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார். பள்ளியின் ஓட்டுநர் கோபால் இரும்பு கம்பியை வைத்து சிறுமி சடலத்தை எடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த குழந்தையின் உடலை அருகில் உள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில், மூன்று வயது குழந்தை, எப்படி வகுப்பறையை விட்டு வெளியே வந்தது? என்றும், பள்ளி கழிவுநீர் தொட்டி சரிவர மூடப்படவில்லையா? என்றும் கேள்விகளை முன் வைத்து பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட பள்ளியின் தாளாளர் எமில்டா, முதல்வர் டொமில்லா மேரி ஆசிரியர் ஏஞ்சல் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் தாளாளர் எமில்டா, முதல்வர் டொமில்லா மேரி, ஆசிரியர் ஏஞ்சல் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டு மூவருக்கு நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

highcourt villupuram
இதையும் படியுங்கள்
Subscribe