Advertisment

செந்தில்பாலாஜிக்கு ஜாமீன்; நிபந்தனைகள் என்னென்ன?

Bail for Senthilbalaji;  What are the conditions?

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி (14.06.2023) அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அதனைத் தொடர்ந்து ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்களைச் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவை தொடர்ச்சியாகத் தள்ளுபடி செய்தன.

Advertisment

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மனு மீதான வழக்கில் இன்று (26.09.2024) காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதில், சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதன் மூலம் சுமார் 15 மாதங்களுக்குப் பின் சிறையில் இருந்து செந்தில் பாலாஜி வெளியில் வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment

செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருக்கும் நிலையில் இன்று மாலை அல்லது நாளை காலை புழல் சிறையில் இருந்து செந்தில் பாலாஜி விடுவிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. வெளியே வரும் அவருக்கு மீண்டும்அமைச்சரவையில் இடம் தர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்பொழுது தமிழக அமைச்சரவையில் 33 பேர் உள்ள நிலையில் ஒரு இடம் காலியாக உள்ளது. தமிழக முதல்வர் டெல்லி என்று திரும்பியதும் அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த வழக்கில் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளநிபந்தனைகளாவது, 'வாரம் தோறும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை அமலாக்கத்துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி கையெழுத்திட வேண்டும்; சாட்சிகளை கலைக்க எவ்வித முயற்சியையும் மேற்கொள்ளக்கூடாது; எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் செந்தில் பாலாஜி ஆஜராக வேண்டும்; 25 லட்சத்திற்கு இருநபர் உத்தரவாதம் வழங்க வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

supremecourt
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe