Bail record for car search ... Police station clerk transferred to Armed Forces!

குற்றம் சாட்டப்பட்டு நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த நபருக்குக் காவல் நிலைய எழுத்தர் அவர் இருக்கும் இடத்திற்கே சென்று கையெழுத்து வாங்கிய சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியான நிலையில் அவர் தற்போது ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

சிவகங்கை மாவட்டத்தில் கண்ணன் என்பவர் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எழுத்தராகப் பணிபுரிந்து வருகிறார். பண மோசடி வழக்கில் கைதான தர்மராஜ் என்பவர் அந்த வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வெளி வந்த நிலையில், தர்மராஜ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தினமும் ஆஜராகிக் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை வழங்கப்பட்டிருந்தது.

Advertisment

இந்நிலையில் தர்மராஜ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குக் கையெழுத்திடுவதற்கு காரில் வந்த நிலையில், காவல் நிலைய எழுத்தாளர் கண்ணன் இருக்கும் காருக்கேஜாமீன் பதிவேட்டை எடுத்துச் சென்று கையெழுத்து வாங்கினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் எழுத்தர் கண்ணன் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.