Bail for Maridas!

சமூக வலைதளங்களில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகள் பதிவிட்டு வந்தவர்யூடியூபர் மாரிதாஸ். பா.ஜ.க.வின் அதி தீவிர ஆதரவாளராக அறியப்படும் இவர் கடந்த 9 ஆம் தேதி மதுரையில் பிற்பகல் ஒரு மணி அளவில் அவரின் வீட்டில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர்.

Advertisment

மாரிதாஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில் அதில் போலி இ-மெயில் தொடர்பான வழக்கு ஒன்றை சென்னை கிரைம் போலீசார் தொடர்ந்திருந்தனர். அந்த வழக்கில் தற்பொழுது மாரிதாஸுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

Advertisment

எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், விசாரணை அதிகாரி முன் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நீதிமன்றம் மாரிதாஸுக்கு நிபந்தனை வழங்கியுள்ளது.