Advertisment

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன்

high court

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கில், தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு.

Advertisment

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி விடுதியில் தங்கிப் படித்து வந்த 12- ஆம் வகுப்பு மாணவி கடந்த ஜூலை 13- ஆம் தேதி அன்று உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் கூறியதால், தனியார் பள்ளியின் முதல்வர் தாளாளர், செயலாளர் மற்றும் இரண்டு ஆசிரியைகள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களை ஒரு நாள் காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் விசாரணை நடத்தினர் . அந்நிலையில், ஐந்து பேரும் ஜாமீன் கேட்டு விழுப்புரத்தில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

Advertisment

அந்த மனுக்கள் கடந்த ஜூலை மாதம் 29ம் தேதி விசாரணைக்கு வந்த போது, தனியார் பள்ளி நிர்வாகிகள் உள்பட ஐந்து பேருக்கும் ஜாமீன் வழங்க நீதிபதி மறுத்துவிட்டார். ஆகஸ்ட் 1- ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்த நீதிபதி சாந்தி, சி.பி.சி.ஐ.டி. பதிவு செய்த குற்ற வழக்கு எண்ணுடன் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து அவர்கள் ஐந்து பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் இன்று நீதிபதி இளந்திரையன் முன் காலை விசாரணைக்கு வந்தது. அதில், பள்ளி முதல்வர் சிவசங்கரன், தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி ஆகிய மூவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார். மேலும், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திக்காவுக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

highcourt kallakurichi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe