Advertisment

ஜாமீனா? சிறையா?- கதிகலங்கும்  டிடிஎஃப் வாசன்

Bail? Jail?- Kathikalangum  TDF Vasan

விதிமுறைகளை மீறி கார் ஓட்டியதாக சர்ச்சைக்குரிய யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கெனவே காஞ்சிபுரம் பகுதியில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தை செலுத்தி விபத்தை ஏற்படுத்திய சம்பவத்தில் கைது செய்யப்பட்டு பல நாட்கள் சிறை தண்டனைக்கு பிறகு டிடிஎஃப் வாசன் வெளியே வந்திருந்தார். அவர் பலமுறை ஜாமீன் கோரியும் கிடைக்காமல் இறுதியாக 10 ஆண்டுகள் இருசக்கர வாகனத்தை இயக்கக் கூடாது என நிபந்தனையோடுஜாமீன் அளிக்கப்பட்டிருந்தது.

Advertisment

இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி சென்னையில் இருந்து திருச்செந்தூர் நோக்கி நண்பர்களுடன் டிடிஎஃப் வாசன் காரில் சென்றுள்ளார். அப்பொழுது மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகே செல்போனில் பேசியபடியே காரை இயக்கியதாகக் கூறப்படுகிறது. இதை யூடியூப் சேனலில் பதிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக மணி பாரதி என்பவர் கொடுத்தப் புகாரின் அடிப்படையில், மதுரை அண்ணா நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கவனக்குறைவாக செல்போனைப் பயன்படுத்தியபடி வாகனத்தை இயக்குதல்; அஜாக்கிரதையாக கார் ஓட்டியது; பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மீண்டும் அவரை கைது செய்துள்ளனர். சென்னையில் வைத்து கைது செய்யப்பட்ட டிடிஎஃப் வாசனை மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.

Advertisment

பிணையில் வர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் டிடிஎஃப் வாசன் ஆஜர் படுத்தப்பட்டார். அப்பொழுது அழைத்துவரப்பட்ட டிடிஎஃப் வாசன் ''என்னை பார்த்துதான்மக்கள் கெட்டுப்போகிறர்கள் என்றால் வீதிக்கு வீதி டாஸ்மாக் இருக்கு. அதைப் பார்த்து மக்கள் கெட்டுப்போக மாட்டார்களா?'' எனக் கேள்வி எழுப்பிக்கொண்டே உள்ளேசென்றார். பின்னர், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரிக்கையை டிடிஎஃப் வாசன் மனுவாக முன்வைத்தார். நீதிபதி சுப்புலட்சுமி முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது டிடிஎஃப் வாசன் தரப்பு வழக்கறிஞர், டிடிஎஃப் வாசனால் எந்த ஒரு தனி மனிதரும் பாதிக்கப்படவில்லை. அவர் மீது எந்த ஒரு புகாரும் பொதுமக்களால் கொடுக்கப்படவில்லை. சென்னையில் இருந்து சென்ற பொழுது எந்தக் காவலரும் விதிமீறல் குறித்து பார்க்கவில்லையா? டிடிஎஃப் வாசன் காரை இயக்கியதால் எந்த விதமான உயிரிழப்பும் ஏற்படவில்லை. நான்காம் தேதி அவர் ஒரு மிகப்பெரிய படத்தில் நடிக்க உள்ளார். அதனால் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.

n

நீதிபதி அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து வழக்கு மதியம் 2.40 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அரசு தரப்புவழக்கறிஞர் சார்பில், ' டிடிஎஃப் வாசன் தொடர்ச்சியாக இதுபோன்றுசெயல்படுகிறார். ஏற்கெனவே அவரது ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. எந்தவிதமான சாகசமும் செய்ய மாட்டேன் என எழுதிக் கொடுத்துள்ளதால் டிடிஎஃப் வாசன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாதம் முன்வைக்கபட்டது. இரண்டு தரப்பு வாதங்களும் நிறைவடைந்துள்ள நிலையில் 2.40 மணிக்கு டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் கிடைக்குமா? அல்லது சிறையா? என்பது தெரிய வரும்.

police madurai ttf
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe