Advertisment

வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம்; வளர்ப்பு நாய்கள் பராமரிப்பு நிறுவனம் கொடுத்த அதிர்ச்சி!

Bad smell from the house; A shock given by the dog exchange company

வளர்ப்பு நாய்களால் மனிதர்கள் தாக்கப்படுவது தொடர்பான சம்பவங்கள் ஒரு புறம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் மறுபுறம் செல்ல பிராணிகளை வளர்ப்பதாக ஒரு வீட்டில் நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

சென்னை பூவிருந்தவல்லி காட்டுப்பாக்கம் பகுதியில் பிரியா என்பவர் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து செல்லப் பிராணிகளை வீட்டில் வளர்த்து வந்தார். அதேபோல் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வெளியூருக்கு செல்லும் பொழுது அவர்களுடைய செல்லப்பிராணிகளைத்தங்கள் வீட்டில் விட்டுச் சென்றால் பராமரித்து பார்த்துக் கொள்வோம். பின்னர் நீங்கள் செல்ல பிராணிகளைப் பெற்றுக் கொள்ளலாம் எனஅறிவுறுத்தி செல்லப்பிராணிகள் வளர்ப்பு மையமாக வீட்டை செயல்படுத்தி வந்தார் என்று கூறப்படுகிறது. வீட்டிலேயே இயங்கி வந்த அந்த செல்லப்பிராணிகள் வளர்க்கும் நிறுவனத்தில் அதிகப்படியான நாய்கள் பராமரிப்புக்கு விடப்பட்டிருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக பிரியா வராததால் வீட்டில் உள்ள நாய்கள் அனைத்தும் உணவின்றி நோய் வாய்ப்பட்டுக் கிடந்துள்ளது. சரியான பராமரிப்பு இல்லாததால் அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் புகார் எழுப்பியுள்ளனர்.

Advertisment
Chennai dog
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe