ADVERTISEMENT

திடீர் ஆய்வில் சிக்கிய தரமற்ற உணவுப் பொருட்கள்

11:56 AM Aug 22, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை செங்குறிச்சி சுங்கச்சாவடி பகுதிகளில் ஏராளமான உணவு விடுதிகளும், சாலையோர உணவகங்களும் உள்ளன. இந்த உணவகங்களில் தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாக வாகன ஓட்டிகள், வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துவந்தனர். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு விருத்தாசலம் சாலையில் உள்ள ஒரு ஒரு சிற்றுண்டி கடையில் போண்டா டீ சாப்பிட்ட ஒருவருக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் சுகந்தன் தலைமையில் கதிரவன், அன்பு, பழநி ஆகியோர் கொண்ட அதிகாரிகள் குழு, செங்குறிச்சி சுங்கச்சாவடி உணவு விடுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, டோல்கேட் பகுதியில் உள்ள இரண்டு அசைவ ஓட்டல்கள், விருத்தாசலம் சாலையில் உள்ள அசைவ ஓட்டல்கள் ஆகியவற்றில் திடீர் சோதனை செய்தனர். அங்கு அதிக அளவு சாயம் பூசப்பட்ட கோழி இறைச்சிகள் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து உணவு தயாரிக்க பயன்படுத்துவதற்கு தயாராக இருந்தன. ஒரு பேக்கரி கடையில் எலி கடித்த மாவு மூட்டை இருந்தது. இவற்றை எல்லாம் அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். மேலும், தரமற்ற உணவுப் பொருட்களைக் கொண்டு உணவு தயாரித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உணவு சாப்பிட வரும் வாடிக்கையாளர்களுக்கு தரமான உணவை சுத்தமான முறையில் தயாரித்து வழங்க வேண்டும் என்று எச்சரிக்கை செய்தனர். அப்பகுதியில் உள்ள கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கினார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT