Advertisment

காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு... தாயுடன் சேர்ந்து மாமியாரை கொன்ற மருமகள்!

காதல் திருமணத்திற்குப் பிறகு மருமகளை மாமியார் காதல் திருமணத்தை காட்டி அடிக்கடி பிரச்சனை செய்ததால் மருமகள் மாமியாரை தாயுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

திருப்பூரை அடுத்த காங்கேயத்தில் உள்ள உத்தண்டகுமாரவலசு கிராமத்தைச் சேர்ந்தவர்பூங்கொடி. நாகேந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் பூங்கொடி. பூங்கொடியின்தாயான கண்ணம்மா மற்றும் நாகேந்திரன், பூங்கொடி ஆகிய 3 பேர் மீதும் ஏற்கனவே மதுரை பைனான்சியரையும் அவரது மனைவியும் கொலைசெய்து வீட்டில் புதைத்த வழக்கு பதிவாகி அந்த வழக்கில் அவர்கள் கோவை சிறையில் தற்போது அடைக்கப்பட்டுள்ளனர்.

incident in thirupur.. police investigation

இந்த நிலையில் பூங்கொடியும் அவரது தாய் கண்ணம்மாவும் ஒன்று சேர்ந்து திட்டமிட்டு ஐந்து மாதத்திற்கு முன்பு பூங்கொடியின்மாமியார் அதாவது நாகேந்திரன் என் தாயை கொலை செய்த அதிர்ச்சித் தகவலும் தற்பொழுது வெளியாகி உள்ளது. நாகேந்திரன் பூங்கொடியை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் இவர்களது காதல் திருமணம் நாகேந்திரன் தாயான ராஜாமணிக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பூங்கொடியை ராஜாமணி அடிக்கடி திட்டியதாகவும் பிரச்சனை செய்ததாகவும் கூறப்படுகிறது. காதல் திருமணம் செய்து கொண்டதற்காக மாமியார் தன்னை கொடுமைப்படுத்துவதை நாளுக்கு நாள் தாங்கிக் கொண்ட பூங்கொடி இது குறித்து அவரது தாயான கண்ணம்மாவிடம் கூறி அழுதுள்ளார்.

Advertisment

incident in thirupur.. police investigation

இந்நிலையில் காதல் திருமணம் செய்துகொண்ட நாகேந்திரன் போதைக்கு அடிமையானதால் அவரும் போதை மறுவாழ்வு சிகிச்சைக்கு பெங்களூருவில் உள்ள அவரது பெரியம்மா வீட்டிற்கு சென்றுவிட்டார். கணவன் இல்லாத சூழலில் மாமியார் கொடுத்த வேலைகளை இழுத்துப் போட்டு செய்த பூங்கொடி தங்கள் ஊரில் திருவிழா நடைபெறுவதாகவும் அதற்கு மாமியார் வரவேண்டும் என கடந்த 5 மாதங்களுக்கு முன்பு விருந்துக்கு அழைத்துள்ளார். விருந்துக்கு வீட்டிற்கு வந்த மாமியாருக்கு மயக்க மருந்து கொடுத்த பூங்கொடி தனது தாய் கண்ணம்மா உடன் சேர்ந்து கொலைசெய்து ராஜாமணி உடலை வீட்டு தோட்டத்தில் புதைத்து அதன் மேல் செடி வைத்து விட்டதாகவும் கூறப்படுகிறது .

pp

நாகேந்திரன் பெங்களூருவிலிருந்து சிகிச்சை பெற்று திரும்பியபோது அம்மா எங்கே என்று கேட்டபோது அவரை காணவில்லை என நாடகமாடி உள்ளார் பூங்கொடி.அவரும் இதுதொடர்பாக அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததை அடுத்து இதுகுறித்து மாயமான வழக்கு தானே என்று கிடப்பில் போலீசார்போட்டுள்ளனர்.

incident in thirupur.. police investigation

இந்நிலையில் தனது சொந்த அண்ணன் செல்வராஜ் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரை இதே பாணியில் உணவில் விஷம் வைத்து கலந்து கொடுத்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த விசாரணையின்போது ஐந்து மாதங்களுக்கு முன்பே மாமியாரை கொலை செய்ததும் தெரியவந்தது. அதனை அடுத்து ராசாமணி புதைக்கப்பட்ட இடத்திற்கு சென்ற போலீசார் அவரது உடலை தோண்டி எடுத்து ரசாயன பரிசோதனைக்கு அனுப்பும் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

அதேபோல் தனது மனைவியும், அவரது தாயும் ஒன்று சேர்ந்து என்அம்மாவை கொன்றது தனக்கு தெரியாது என்று காவல்துறையிடம் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Investigation police Love marriage murder love thirupur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe